Home » தொழில்நுட்பம் »
நவீன தொழில்நுட்ப உதவியுடன் வீட்டை நகர்த்தி வைத்து சாகசம் !
கோவை சாயிபாபாகாலனி மேட்டுப்பாளையம் ரோட்டில் ரியல்எஸ்டேட் உரிமையாளர் தங்கவேல் என்பவரின் வீடு உள்ளது. இவரது தந்தை வக்கீல் ஆறுச்சாமி 30 ஆண்டுகளுக்கு முன்பு 2,400 சதுர அடியில் முதல் தளத்துடன் வீடு கட்டினார். தங்கவேலு தற்போது அந்த இடத்தில் புதிய வீடு கட்ட முடிவுசெய்தார். ஆனால், பழைய வீட்டை இடிக்க மனமில்லை. அதனால், வீட்டை அப்படியே நகர்த் தும் தொழில்நுட்பம் பற்றி அறிந்து அரியானாவை சேர்ந்த டி.டி.பி.டி. இன்ஜினியரிங் ஒர்க்ஸ் என்னும் நிறுவனத்தை தொடர்புகொண்டார். அந்நிறுவன நிர்வாக இயக்குனர் சுஷில் சிஷோடியா தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் வந்தனர்.
வீட்டை 50 அடிக்கு பக்கவாட்டில் நகர்த்த 2 மாதங்களுக்கு முன்பு பணியை துவக்கினர். வீட்டை சுற்றி நான்குபுறமும் பூமிக்குள் துளை போட்டு, அஸ்திவாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர், ஜாக்கிகள் உதவியுடன் வீடு ஒன்றரை அடி உயரத்துக்கு தூக்கப்பட்டது. பின்னர், அதன்கீழ் இரும்பு ரோலர்கள் பொருத்தப்பட்டு, வீட்டை அணு அணுவாக நகர்த்தும் பணி துவங்கியது. இதற்காக, மொத்தம் 300 ஜாக்கிகள், 300 ரோலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக, பக்க வாட்டில் உள்ள காலி இடத்தில் அஸ்திவாரம் போடப்பட்டு தயார் நிலையில் ஒன்றரை அடி மேலே உயர்த்தி வைக்கப்பட்டது. அந்த அஸ்திவாரத்தை நோக்கி வீடு படிப்படியாக நகர்த்தப்படுகிறது. கடந்த 20 நாளில் 35 அடி தூரம் நகர்த்தப்பட்டுள்ளது.
இன்னும், 15 அடி தூரம் நகர்த்தப்பட வேண்டியுள்ளது. முழுமையாக நகர்த்தி முடிக்கப்பட்ட பிறகு தரை தளத்தில் சில வேலைகள் செய்யப்பட வேண்டியுள்ளது. அடுத்து, செப்டிங் டேங்க் இணைப்பு கொடுக்கப்பட வேண்டும். இவை இரண்டையும் செய்துமுடித்தால் மீண்டும் அந்த வீட்டில் எப்போதும்போல் குடியிருக்கலாம். தேவைப்பட்டால் இன்னொரு மாடிகூட மேலே கட்டலாம் என்கிறார்கள் பொறியாளர்கள். இந்தியாவிலேயே முதன் முறை: இதுபற்றி, டிடிபிடி நிர்வாக இயக்குனர் சுஷில்கிசோடியா கூறியதாவது: இதுவரை எங்கள் நிறுவனம் சார்பில் தரைதளம் அளவு உள்ள வீடு மட்டும் நகர்த்தியுள்ளோம். அதிகபட்சமாக 150 டன் எடையுள்ள வீட்டை மட்டும்தான் நகர்த்தியுள்ளோம். 
தற்போது, இந்தியாவிலேயே முதன் முறையாக முதல்தளத்துடன் கூடிய, 400 டன் எடை கொண்ட வீட்டை நகர்த்தி உள்ளோம். ஒயரிங், பிளம்பிங், சுவர்கள், கதவுகள், ஜன்னல்கள் என எதையும் தொடவில்லை. செப்டிக் டேங்க் இணைப்பு மட்டும்தான் துண்டிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் மீதமுள்ள தூரத்துக்கு நகர்த்தி விடுவோம். ஒரு சதுரடி கட்டிடத்தை ஒரு மீட்டர் நீளத்துக்கு நகர்த்த 300 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். வீட்டு உரிமையாளர் தங்கவேலின், தந்தை வக்கீல் ஆறுச்சாமி கூறுகை யில், வீட்டை முழுமையாக இடித்துவிட்டு, புதிதாக கட்டினால் 80 லட்சம் ரூபாய் செலவாகும். ஆனால், இதை நகர்த்த 18 லட்சம் முதல் 20 லட்சம் வரைதான் செலவாகிறது என்றனர்.
Related posts:
If you enjoyed this article, subscribe to receive more great content just like it.
Popular Posts
-
தரங்கம்பாடி: காரைக் கால் மாவட்டம் கீழ காசாகுடியை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவி ஹர்சதா நவீன தெருவிளக்கு ஒன்றை வடிவமைத்துள்ளார்.
-
உலகின் கண்ணி வெடிகளை அகற்ற தன் ராஜ அந்தஸ்தை ஆயுதமாகப் பயன்படுத்திய தொண்டுள்ளம் கொண்ட ஒரு இளவரசியின் வாழ்வில் ஏற்பட்ட பரிதாப முடிவின் கதைத...
-
நியூயார்க்-: சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்களை திரவ வடிவில் உருவாக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. தரையிலும் சுவர...
-
காய்ச்சல் போன்ற நோய் ஏற்படும் தருணங்களில் வெப்பநிலையை அளவிடுவதற்கு பயன்படுத்தப்படும் வெப்பமானிகளை தற்போது ஸ்மார்ட் போன்களில் இணைத்து பயன்...
-
காப்பாற்றியவர்கள் நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள் இல்லை, ஆயிரம் பேர் வந்தாலும் ஒரே ஆளா நிண்ணு சமாளிக்கிற சினிமா ஹீரோக்...
-
மேட்ரிட்: எல்இடி விளக்குகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்...
-
******************* அமெரிக்கர்கள் ******************* பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500 அடி ஆழத்தில் மின்சார கேபிள்கள் ...
-
புலிகளினால் சமாதானக் காலப்பகுதியில் பொது மக்களின் நலன்களுக்காக பல்வேறு துறைசார் நிறுவனங்கள் ஆரம்பிக்கபட்டன. அதில் ஒன்றுதான் இந்த பாண்டியன...
-
கோவை: புதிய வீடு கட்டுவதற்காக, பாரம்பரிய வீட்டை இடிக்காமல், நவீன தொழில்நுட்ப உதவியுடன் அலேக்காக 35 அடி தூரம் காலி இடத்துக்கு நகர்த்தப்பட...
-
உ லகின் ஒவ்வரு ஆதி இனமும், இன்று வாழும் தலைமுறைக்கு எதிர்காலம் பற்றி சிறு தடயத்தையாவது விட்டுத்தான் சென்று இருக்கிறது. அந்த தடயங்கள், எ...
Recent Posts
Get in Touch
Custom content
Recent Stories
Connect with Facebook
Sponsors
Search
Archives
-
▼
2013
(26)
- ► செப்டம்பர் (6)
-
▼
ஜூன்
(18)
- தென்னிந்திய திரைப்படத்தில் தீபச்செல்வன் எழுதிய நம்...
- விடை காண முடியாத வினாக்களாக இவர்கள் ...!
- மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்...!
- லண்டனில் தமிழ்ப் பெண்ணை எட்டி உதைத்த சிங்களவரின் ப...
- தொலைவில் இருக்கும் கணணியை நமது கணினி மூலம் இயக்குவ...
- 72 மணி நேரத்தில் 1 லட்சம் பொதுமக்களை உத்தர்காண்டில...
- இந்த கடையினை யாருக்காவது நியாபகம் இருக்கின்றதா ...?
- நவீன தானியங்கி தெருவிளக்கு : 6ம் வகுப்பு மாணவி வடி...
- எல்.இ.டி விளக்குகளால் கண் பார்வை பறிபோகும் !
- விரைவில் வருது சோலார் பெயின்ட் !
- நவீன தொழில்நுட்ப உதவியுடன் வீட்டை நகர்த்தி வைத்து ...
- மாணவர்களுக்காக Sky Drive தரும் மேலதிக சேமிப்பு வசதி !
- முழு திரைப்படத்தையும் 1-விநாடியில் தரவிறக்கம் செய்...
- பேஸ்புக்கை தாக்கும் புதிய வைரஸ் : எச்சரிக்கும் மைக...
- தண்டனை எல்லாம் வதையாகுமா... ?
- அன்ராய்ட் அன்ராய்ட் சந்தைக்கான 5 மாற்று சந்தைகள் !
- இணையத்தள திருட்டில் இருந்து உங்கள் தளத்தை பாதுகாப்...
- கையால் இயக்கும் காரை வடிவமைத்த தமிழக மாற்றுத் திறன...
Categories
லேபிள்கள்
- அறிவியல் (2)
- சந்தை (1)
- தன்னம்பிக்கை (2)
- தெய்வங்கள் (2)
- தொலைபேசி (1)
- தொழில்நுட்பம் (9)
- நகைச்சுவை (1)
- பாதுகாப்பு (2)
- முள்ளு (1)
- மென்பொருள் (1)
- வரலாறு (5)
Blog Archives
-
▼
2013
(26)
- ► செப்டம்பர் (6)
-
▼
ஜூன்
(18)
- தென்னிந்திய திரைப்படத்தில் தீபச்செல்வன் எழுதிய நம்...
- விடை காண முடியாத வினாக்களாக இவர்கள் ...!
- மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்...!
- லண்டனில் தமிழ்ப் பெண்ணை எட்டி உதைத்த சிங்களவரின் ப...
- தொலைவில் இருக்கும் கணணியை நமது கணினி மூலம் இயக்குவ...
- 72 மணி நேரத்தில் 1 லட்சம் பொதுமக்களை உத்தர்காண்டில...
- இந்த கடையினை யாருக்காவது நியாபகம் இருக்கின்றதா ...?
- நவீன தானியங்கி தெருவிளக்கு : 6ம் வகுப்பு மாணவி வடி...
- எல்.இ.டி விளக்குகளால் கண் பார்வை பறிபோகும் !
- விரைவில் வருது சோலார் பெயின்ட் !
- நவீன தொழில்நுட்ப உதவியுடன் வீட்டை நகர்த்தி வைத்து ...
- மாணவர்களுக்காக Sky Drive தரும் மேலதிக சேமிப்பு வசதி !
- முழு திரைப்படத்தையும் 1-விநாடியில் தரவிறக்கம் செய்...
- பேஸ்புக்கை தாக்கும் புதிய வைரஸ் : எச்சரிக்கும் மைக...
- தண்டனை எல்லாம் வதையாகுமா... ?
- அன்ராய்ட் அன்ராய்ட் சந்தைக்கான 5 மாற்று சந்தைகள் !
- இணையத்தள திருட்டில் இருந்து உங்கள் தளத்தை பாதுகாப்...
- கையால் இயக்கும் காரை வடிவமைத்த தமிழக மாற்றுத் திறன...
Recent Comments
Tag Cloud
Categories
- அறிவியல் (2)
- சந்தை (1)
- தன்னம்பிக்கை (2)
- தெய்வங்கள் (2)
- தொலைபேசி (1)
- தொழில்நுட்பம் (9)
- நகைச்சுவை (1)
- பாதுகாப்பு (2)
- முள்ளு (1)
- மென்பொருள் (1)
- வரலாறு (5)
தீ-தமிழ். Blogger இயக்குவது.
0 கருத்துகள் for this post
Leave a reply