Home » தொழில்நுட்பம் »
Apple இலும் வந்துவிட்டது தமிழ் !
தொன்மையான மொழிகளில் ஒன்றான நமது தமிழ்மொழி தற்போது கையடக்க கணினிகளிலும், செல்பேசிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனமும், தனது செல்பேசி சாதனங்களில், தமிழில் தட்டச்சு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
"கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி" என்ற பெருமைப் பெற்ற தமிழ் மொழி, நவீன காலத்தோடு ஒன்றிணைந்து இணையதளங்களில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
செல்போன்களில் இணையதளங்களை பார்ப்போரின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ள இந்த சூழலில் டேப்லட் என்றழைக்கப்படும் கையடக்க கணினிகளிலும், ஆன்டிராய்டு, விண்டோஸ், ஆப்பிள் ஐஓஎஸ் ஆகிய இயங்குதளங்களைக் கொண்ட செல்போன்களிலும் தமிழில் தட்டச்சு செய்ய வேண்டும் என்ற கனவு தற்போது நிறைவேறியிருக்கிறது.
ஏற்கனவே ஆன்டிராய்டு, விண்டோஸ் ஆகிய இயங்குதளங்கள் மட்டுமே தமிழில் தட்டச்சு செய்யும் வசதியை அளித்து வந்தாலும் கூட வெளிநாடுகளில் பெருமளவு பயன்படுத்தப்படும் ஆப்பிள் ஐபோன் மற்றும் ப்ளாக்பெர்ரி செல்பேசிகளில் இந்த வசதி கிடைக்காமல் இருந்தது.
உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களை கவரும் நோக்கில், தனது புதிய பதிப்பான "ஐ போன் - 5எஸ்"-ல் தமிழில் தட்டச்சு செய்யும் வசதியை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆப்பி்ள் ஐபோனிற்கான தமிழ் விசைப்பலகையை வடிவமைத்துள்ளவர் மலேசிய வாழ் தமிழரான முத்து நெடுமாறன். ஐ போனின் புதிய இயங்குதளத்துடன் இணைந்தே தமிழ் விசைப்பலகை வெளியிடப்பட்டுள்ளதால் இதற்கென தனியாக அப்ளிகேஷன்ஸ் எனப்படும், செயலிகளை இனி பதிவிறக்கம் செய்யத்தேவையில்லை. இதன்மூலம், இணையதளத்தேடல், எண்களை பதிவு செய்துகொள்ளுதல், என அனைத்து பயன்பாடுகளுக்கும் இனி தமிழ் மொழியை பயன்படுத்தலாம்.
மேலும் மின்னஞ்சல், குறுஞ்செய்தி ஆகியவற்றை தமிழிலேயே அனுப்ப முடிவதோடு, சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டிவிட்டர் ஆகியவற்றிலும் இனி தமிழில் சுலபமாக எழுத முடியும். செல்போன் விற்பனைச் சந்தையில்ஆப்பிள் நிறுவனத்தைப்போல மற்றொரு பிரபல நிறுவனமான பிளாக்பெர்ரி நிறுவனமும் தனது அடுத்த அறிமுகமான 10 வது பதிப்பில் தமிழில் தட்டச்சு செய்யும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.

Related posts:
If you enjoyed this article, subscribe to receive more great content just like it.
Popular Posts
-
தரங்கம்பாடி: காரைக் கால் மாவட்டம் கீழ காசாகுடியை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவி ஹர்சதா நவீன தெருவிளக்கு ஒன்றை வடிவமைத்துள்ளார்.
-
காய்ச்சல் போன்ற நோய் ஏற்படும் தருணங்களில் வெப்பநிலையை அளவிடுவதற்கு பயன்படுத்தப்படும் வெப்பமானிகளை தற்போது ஸ்மார்ட் போன்களில் இணைத்து பயன்...
-
காப்பாற்றியவர்கள் நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள் இல்லை, ஆயிரம் பேர் வந்தாலும் ஒரே ஆளா நிண்ணு சமாளிக்கிற சினிமா ஹீரோக்...
-
மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட கிளவுட் ஸ்டோரேஜ் (cloud storage) எனப்படும் ஆன்லைன் சேமிப்பு வசதியானது மில்லியன் பயனர்க...
-
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கைபேசி திரையை தொட்டு பயன்படுத்துவோம். அழுத்தும் வேகம், மேலே கீழே தடவுவது என இந்த செயல்கள் ஒவ்வொரு ஆளுக்கும் ...
-
அப்பிள் நிறுவனம் அதனது ஐ ஃபோன் வரிசையின் புதிய படைப்பினை செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியா...
-
சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி இன்றைய காலகட்டத்தில் அபாரமானதாக இருக்கிறது. Facebook, Tweeter, Google+ போன்ற சமூக வலைத்தளங்களில் பலரும் மணிக்...
-
அன்ராய்டு சந்தை - கூகிலின் அங்கீகரிக்கப்பட்ட அன்ராய்டு போன்களுக்கான சந்தை. இங்கே இலவசமாகவும் பணம் செலுத்தியும் மென்பொருட்களை ப...
-
தொன்மையான மொழிகளில் ஒன்றான நமது தமிழ்மொழி தற்போது கையடக்க கணினிகளிலும், செல்பேசிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
-
ஒரு விநாடியிலேயே முழு திரைப்படத்தையும் டவுன்லோடு செய்யும் அளவுக்கு அதிவேகம் கொண்ட, ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றை சோதனையை சாம்சங் நிறுவ...
Recent Posts
Get in Touch
Custom content
Recent Stories
Connect with Facebook
Sponsors
Search
Archives
-
▼
2013
(26)
- ▼ செப்டம்பர் (6)
Categories
லேபிள்கள்
- அறிவியல் (2)
- சந்தை (1)
- தன்னம்பிக்கை (2)
- தெய்வங்கள் (2)
- தொலைபேசி (1)
- தொழில்நுட்பம் (9)
- நகைச்சுவை (1)
- பாதுகாப்பு (2)
- முள்ளு (1)
- மென்பொருள் (1)
- வரலாறு (5)
Blog Archives
-
▼
2013
(26)
- ▼ செப்டம்பர் (6)
Recent Comments
Tag Cloud
Categories
- அறிவியல் (2)
- சந்தை (1)
- தன்னம்பிக்கை (2)
- தெய்வங்கள் (2)
- தொலைபேசி (1)
- தொழில்நுட்பம் (9)
- நகைச்சுவை (1)
- பாதுகாப்பு (2)
- முள்ளு (1)
- மென்பொருள் (1)
- வரலாறு (5)
தீ-தமிழ். Blogger இயக்குவது.
0 கருத்துகள் for this post
Leave a reply