அவள் அரச குடும்பத்தில் ஒருத்தியாக இருந்தும் அவர்களாலேயே பலி வாங்கப்பட்டாள் !

கூரைக் கொட்டடியில் வாழ்பவரும் தன் செயலூக்கத்தால் ஒரு நாட்டுக்கே ராணியாகமுடியும் என்று அச்சிடப்பட்டு படமாக்ககப்பட்ட கதைகளில்தான் நாம் கேட்டிருப்போம். ஆனால் தற்காலத்திலே அதேபோல் ஏழ்மை நிலையில் இருந்து ஒரு தன் ஆற்றலால் ராணியானவர்தான் டயானா.

வேல்ஸ் இளவரசி டயானாவின் இயற்பெயர் பிரான்செஸ் ஸ்பென்சர், (ஜூலை 1, 1961 – ஆகஸ்ட் 31, 1997) வேல்ஸ் இளவரசர் சார்லசின் முதலாவது மனைவி இவர். இவர்களின் காதல் கதை சுவாரசியமானது. உலகப்பிரசித்தம் பெற்றது. காதல் கனிந்து இல்வாழ்க்கையில் ஈடுபட்டனர். இவர்களது பிள்ளைகள் இளவரசர்கள் வில்லியம், ஹென்றி (ஹரி) ஆகியோர் பிரித்தானியாவுக்கு முறையே இரண்டாவது, மூன்றாவது முடிக்குரியவர்கள்.
இளவரசர் சார்லசுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார். ஐக்கிய அரசில் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் இவர்களது திருமண வாழ்வு தொடக்கம் முதல் மணமுறிவு ஏற்படும் வரையில் ஊடகத் துறையில் அதிகம் பேசப்பட்டார்.
பாரிசில் 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 இல் இவர் சாலை விபத்து ஒன்றில் கொல்லப்பட்டதை அடுத்து உலகெங்கும் இவருக்குப் பெரும் அனுதாப அலை பெருகத் தொடங்கியது.
நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்ட இவரது மரண விசாரணைகளின் இறுதி முடிவுகள் பதினொரு ஆண்டுகளுக்குப் பின்னர் ஏப்ரல் 2008 இல் வெளியிடப்பட்டது. இதன்படி “இவரது மரணம் டயானாவின் கார் ஓட்டுநர் சாலை சட்ட விதிகளை மீறியமையினாலும், பப்பராசிகளின் செய்கைகளினாலுமே விளைந்தது” எனத் தீர்ப்புக் கூறப்பட்டது.
15 வருட இங்கிலாந்தின் இளவரசி என்ற படோட வாழ்க்கை யால் மீடியாக்களில் படாதபாடுபட்டார் டயானா.
விவாகரத்திற்குப் பின்னர், தன்னை மருமகளாக ஏற்ற வின்ட்ஸர் அரச குடும்பத்தாலேயே தான் கொலை செய்யப்பட இருக்கிறோம் என்பதை சுதாரித்துக்கொண்டார். அதை ஆவணமாகவும் பதிவுசெய்து கீழ்க்கண்ட வாறு எழுதியும் வைத்தார்.
”இந்த அக்டோபர் 1996 ம் நாளில் எனக்கு ஆதரவும் ஊக்கமும் அளித்து உதவிசெய்பவர் யாரும் உண்டோ என்று ஏங்கிய வண்ணம் இருக்கிறேன். எனது கணவரோ (சார்லஸ்) என்னை கார் விபத்துக்குள்ளாக்க விரும்புகிறார். எனது காரின் வேகம் நிறுத்தியை செயலிழக்கச்செய்தும் எனது தலையில் பயங்கர காயத்தை ஏற்படுத்தியும் அதை நிறைவேற்ற முயற்சிக்கிறார்…”
இந்நிலையில் டோடி என்னும் இமாத் முஹம்மது அல் ஃபாயித் என்ற முஸ்லிம் இளைஞரை தனக்கு ஆதரவு அளிப்பவராகக் கண்டு காதலித்தார். வழக்கம்போல இருவருக்கும் உள்ள உறவு பற்றிய சர்ச்சையில் மீண்டும் சிக்கினார்.
எயிட்ஸ் நோயாளிகளுக்கு சேவைகள், தர்ம அறக்கட்டளைகள் நிறுவுதல் என்று சற்று மாறத் துவங்கிய டயானா மக்கள் சேவை புரிதலே தான் தன் தலையாயக் கடமை என்றிருந்தார். அன்பு, மக்களிடையே நிலவும் சகிப்புத் தன்மையில்லா போக்குகள் பற்றி பொதுப்படையாக பேசத் துவங்கினார்.
அந்த நேரத்தில்தான் அவர் யூகித்த அந்தப் படுகொலை சம்பவம் நடந்தும் விட்டது. 1997 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31 ம் தேதி நள்ளிரவு. உலகிலேயே அதிக விலையும், பாதுகாப்பும் நிறைந்த கார்களில் ஒன்றாகக் கூறப்பட்ட அந்தக் கார் இளவரசி டயானாவையும், அவரது அப்போதைய காதலர் டோடி ஃபாயிது, இவர்களுக்கு மெய்க்காப்பாளர் ஒருவர் மற்றும் ஓட்டுநர் என்று நால்வரைச் சுமந்து சென்றது.
டயானாவின் நடத்தைகளைப் புகைப்படமெடுத்து பரபரப்பு செய்தி களை வெளியிட காத்துக்கிடந்த பத்திரிகைப் புகைப்படக் குழுவினர் டயானாவின் காரை அசுர வேகத்தில் பின்தொடர்ந்தனர்.
பாரிஸ் நகர சுரங்கப் பாதையில் அதிவேகத்தில் சென்ற டயானாவின் கார் பெரும் விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த சில வினாடிகளில் டோடி ஃபாயிதும் ஓட்டுனரும் இறந்துபோயினர். குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த டயானா சிகிச்சை பலனிற்றி இறந்தார். அவரது மெய்க்காப்பாளர் மட்டும் உயிர் தப்பினார்.
டயானா ரசிகர்களின் கோபக்குமுறல்கள் அந்தப் புகைப்படக் குழுவி னரை நோக்கிப் பாய்ந்தன. ஃபிரான்ஸின் தடவியல் துறையினருடன், உளவுத் துறையினரும் களத்தில் இறங்கி விபத்து குறித்து நடத்திய புலன் விசாரணையில் ஓட்டுநர் அதிகமாக மது அருந்தியிருந்ததாகவும் அதனா லேயே கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி விபத்துக்குள்ளான தாகவும் கூறி விஷயத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
டயானா இறந்த ஒரு வாரத்திற்குள் 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை டயானா பெயரில் தானம் செய்து ஃபிரான்ஸின் ஸ்பென்ஸர் குடும்பம் டயானாவின் இறப்பின் துக்கத்தை வெளிக்காட்டினர். மேற்கத்திய பத்திரிகைகள் இப்படுகொடுலையை இப்படி எழுதின “அவள் அரச குடும்பத்தில் ஒருத்தியாக இருந்தும் அவர்களாலேயே பலி வாங்கப்பட்டார்.”
டயானாவின் உடல் அடக்கம் 1997 செப்டம்பர் 6ம் நாள் நடை பெற்றது. தனது இருமகன்கள் மற்றும் முன்னாள் கணவர் சார்லஸ், அவரது அரச குடும்பம் மற்றும் டயானா தன் பொறுப்பில் தொடங்கிய 110 அறக்கட்டளைகளிலிருந்தும் பிரதிநிதிகள் உட்பட லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட அவரது இறுதி ஊர்வலத்தை இப்பூமியில் வதிக்கும் அதிகமான மக்கள் அன்று தொலைக்காட்சி மூலம் கண்டதாகத் தகவல். அதனால்தானோ என்னவோ பிரிட்டனை ஆளும் வின்ட்ஸர் அரசாங்கம் தங்கள் பக்கிங்ஹாம் அரண்மனைக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு அனுதாபம் தேடிக் கொண்டனர்.
சாதாரண குடும்பத்தில் பிறந்து தன் அழகாலும் சேவை மனப்பான்மையாலும் உயர்ந்த இடத்தில் வாழ்க்கைப்பட்டு அரண்மனை, கணவன் என்று முடங்காமல் பொதுச்சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அவர்களுக்கும் மேலாகப் புகழ் பெற்றுவந்தார் டயானா.
இது மன்னர் குடும்பத்துக்கு சங்கடத்தைத் தந்தது நாடறியும். அதனால் குறைந்த காலத்திலேயே அவரது வாழ்வும் தொண்டும் முடக்கப்பட்ட பரிதாபத்துக்குரிய ஒரு இளவரசியின் வரலாறை இந்தப் பூமி அவ்வளவு சீக்கிரத்தில் மறக்காது.

Related posts:
If you enjoyed this article, subscribe to receive more great content just like it.
Popular Posts
-
தரங்கம்பாடி: காரைக் கால் மாவட்டம் கீழ காசாகுடியை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவி ஹர்சதா நவீன தெருவிளக்கு ஒன்றை வடிவமைத்துள்ளார்.
-
காய்ச்சல் போன்ற நோய் ஏற்படும் தருணங்களில் வெப்பநிலையை அளவிடுவதற்கு பயன்படுத்தப்படும் வெப்பமானிகளை தற்போது ஸ்மார்ட் போன்களில் இணைத்து பயன்...
-
காப்பாற்றியவர்கள் நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள் இல்லை, ஆயிரம் பேர் வந்தாலும் ஒரே ஆளா நிண்ணு சமாளிக்கிற சினிமா ஹீரோக்...
-
மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட கிளவுட் ஸ்டோரேஜ் (cloud storage) எனப்படும் ஆன்லைன் சேமிப்பு வசதியானது மில்லியன் பயனர்க...
-
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கைபேசி திரையை தொட்டு பயன்படுத்துவோம். அழுத்தும் வேகம், மேலே கீழே தடவுவது என இந்த செயல்கள் ஒவ்வொரு ஆளுக்கும் ...
-
அப்பிள் நிறுவனம் அதனது ஐ ஃபோன் வரிசையின் புதிய படைப்பினை செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியா...
-
சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி இன்றைய காலகட்டத்தில் அபாரமானதாக இருக்கிறது. Facebook, Tweeter, Google+ போன்ற சமூக வலைத்தளங்களில் பலரும் மணிக்...
-
அன்ராய்டு சந்தை - கூகிலின் அங்கீகரிக்கப்பட்ட அன்ராய்டு போன்களுக்கான சந்தை. இங்கே இலவசமாகவும் பணம் செலுத்தியும் மென்பொருட்களை ப...
-
தொன்மையான மொழிகளில் ஒன்றான நமது தமிழ்மொழி தற்போது கையடக்க கணினிகளிலும், செல்பேசிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
-
ஒரு விநாடியிலேயே முழு திரைப்படத்தையும் டவுன்லோடு செய்யும் அளவுக்கு அதிவேகம் கொண்ட, ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றை சோதனையை சாம்சங் நிறுவ...
Recent Posts
Get in Touch
Custom content
Recent Stories
Connect with Facebook
Sponsors
Search
Categories
லேபிள்கள்
- அறிவியல் (2)
- சந்தை (1)
- தன்னம்பிக்கை (2)
- தெய்வங்கள் (2)
- தொலைபேசி (1)
- தொழில்நுட்பம் (9)
- நகைச்சுவை (1)
- பாதுகாப்பு (2)
- முள்ளு (1)
- மென்பொருள் (1)
- வரலாறு (5)
Recent Comments
Tag Cloud
Categories
- அறிவியல் (2)
- சந்தை (1)
- தன்னம்பிக்கை (2)
- தெய்வங்கள் (2)
- தொலைபேசி (1)
- தொழில்நுட்பம் (9)
- நகைச்சுவை (1)
- பாதுகாப்பு (2)
- முள்ளு (1)
- மென்பொருள் (1)
- வரலாறு (5)
தீ-தமிழ். Blogger இயக்குவது.
0 கருத்துகள் for this post
Leave a reply