Featured Posts
Recent Articles

நாமறியாத நம் பெருமை - அடிமைகளின் சின்னமான தமிழனின் பெருமை மிகு வரலாறு!


நாம் பேசும் தமிழ் பலரும் அறிந்தது தமிழ் மொழியும் எம் பண்பாடு கலாசாரம் என்பன இன்றைக்கு ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்றே பலராலும் நம்பப்படுகிறது.ஆனால் நாமெல்லாம் அறியா எம் தமிழ் மொழி தோன்றி இருபதாயிரம் ஆண்டுகள் என்றால் நம்ப முடியுமா?தமிழினம் மிகவும் பழமையான இனம், உலக மொழிகளில் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி.உலக மொழிகளை ஆராய்ந்தால் அவற்றில் தமிழ் சொற்களும்,பெயர்களும் வெவ்வேறு வடிவில் இருக்கிறன என்ற ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறன.


உண்மைதான் இதற்கான ஆதாரம் எம் தமிழும்,தமிழ் பாரம்பரியமும் தோன்னிய குமரிக்கண்டம் இன்றைக்கு இருபதாயிரம் ஆண்டுகளுக்க முன் தமிழனின் பிறப்பிடமும்,தமிழனின் பாரம்பரியமும் குமரிக்கண்டம்தான்.அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது அன்றுறே எமது தமிழ் மேதைகளினால் கண்டறியப்பட்டு பெயர் சூட்டப்பட்ட கடல் கோளினால் இக்கண்டம் அழிந்து போனது.முச்சங்க வரலாற்றிலும்,சிலப்பதிகார உரைகள்,தேவநாயேப் பாவனார் எழுதிய முதற் தாய் மொழி வாயிலாகவும் எம்மால் அறிந்து கொள்ள முடியும்.தமிழன் தோன்றிய குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ்.பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சத்தை எட்டினர்.



குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய கண்டம் அளவில் மிகப்பெரியதாக பரவி இருந்தது.மேற்கே தென்னாபிரிக்கவை,கிழக்கே அவுஸ்ரேலியாவையும்,வடக்கே இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக்கண்டம்.அக்காலம் தமிழன் உலகை ஆண்ட காலம்.....இதனை பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராட்டஸ் இக் கருத்தினை 
பேரறிஞர் ஓல்டுகாம்,எக்கேல்,கிளேற்றர்.எலியட் என்பவர்கள் ஏகமனதாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.



அக்காலத்தில் குமரிக்கண்டத்தை 14 மாநிலங்களாக பிரித்திருந்தனர்.அதாவது 7 தெங்கு நாடு,7 பனை நாட எனப் பிரித்திருந்தனர்.அங்கு வாழ்தவன்தான் தமிழன் அவனது நாகரிகம் தான் திராவிட நாகரிகம்.!எம்முடைய நாகரிகமும் மொழியுமே உலகில் முதன்மை வாய்ந்தது,முதலில் தோன்றியது.தனது பெருமையை கடல் வழியாகவும்,தரை மார்க்கமாகவும் உலகெங்கும் பயணம் செய்து தமிழ் மொழியையும் தமிழ் பண்பாட்டையும்,தமிழ் கலாசாரத்தையும் பாரெங்கும் பரப்பினான் என்பதே உண்மை.



இதற்கு சான்றாக பீனீசியர்களின் நாணயங்களும்,கல்வெட்டுக்ளும் தாய்லாந்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்டம்,கம்போடியாவில் உள்ள மிகப் பெரிய கோவில்,போப்பாண்டவரால் பாதுகாக்கப்பட்டு வரும் பனை ஓலையில் எழுதப்பட்ட பழங்கால தமிழ் சுவடிகள் என்பன சான்றாக அமைகிறன.அக்காள்,அக்கை போன்ற சொற்கள் பின்லாந்தின் பின்னிய மொழியிலும், அன்னை,அத்தை முதலிய சொற்கள் கிதைதி மொழியிலும் காணப்படுகிறன.ஆறு,அப்பா,ஆசா,தபி போன்ற சொற்கள் சுமேரிய மொழயிலும் காணப்படுகிறன.



இந்து மா கடலின் கடற்றள வரைபடங்களில் குமரிக்கண்டத்தின் பூர்வீக அமைப்புக்கள் காணப்படுகிறன. இலடசத்தீவுப்பகுதியில்,மாலை தீவின் வடக்கு பகுதியுடன் பிணைந்து ஆரபிலாகோ வரை சுமார் 2000 மைல் துரம் குமரிகண்டம் இருந்திருக்குமென நம்பப்படுகிறது.



இங்குதான் உலகில்முதல் மனிதன் பிறந்ததாக ஆய்வாளர்கள் கருதுகிறனர்.இங்குதான் நம் மூதாதையர்கள் வாழ்ந்தார்கள்.இன்று நாம் கதைக்கும் தாய் தமிழ் மொழி பிறந்தது. பலராலும் நாவலன் தீவு என்ப்பட்ட குமரிக்கண்டம் கடலுக்கடியில் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் இக் கண்டம் ஒரு காலத்தில் உலகையே தன் பக்கம் திரும்ப வைத்த மாபெரும் தமிழ்க் கண்டம்.இன்று தனித்தனி நாடுகளாக உள்ள அவுஸ்ரேலியா,மடகஸ்கார்,தென் ஆபிரிக்கா, இலங்கை,தமிழ் நாடு,மண்ணுக்குள் புதையுண்ட பல நாடுகளையும் இணைத்தவாறு இருந்த பிரமாண்டமான நிலப்பரப்புத்தான் தமிழம்,தமிழனும் வாழ்ந்த பிறந்த குமரிக்கண்டம்,இதில்பறுளி,குமரி என்று மாபெரும் ஆறுகள் இரண்டு ஓடியுள்ளன.குமரிக்கொடு,மணமலை என்ற இரு மலைகள் இருந்துள்ளன. இரமாயணம், மகாபாரதம் போன்ற தமிழ் இலக்கியங்களிலும் குமரிக்கண்டம் பற்றி கூறப்பட்டள்ளது.



இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட குமரிக்கணடம் நான்கு கடற்கோள்களினான் பாரிய அழிவினால் கடலுக்குள் புதையுண்டுள்ளது.குமரிகண்டத்தை அழித்த கடல் கோள்கள் முதலில் தென் மதுரையையும்,அடுத்ததாக நாகநன்னாட்டையும்,மூன்றாவதாக கபாடாபுரம், நான்காவதாக காவிரிப்பூம்பட்டினத்தையும் கடலுக்குள் ஆட்கொண்டது.



உலகின் தொன்மையான நாகரீகம் எனப்படும் சுமேரியன் நாகரிகம் 4000 வருடங்கள் பழமையானது. ஆனால் குமரிக்கண்டத்தில் தோன்றிய
தமிழரின் நாகரிகம் 20,000 வருடங்கள் பழமையானது.



நக்கீரர் ”இறையனார் அகப்பொருள்” எனும் நுலில் மூன்று தமிழ் சங்கங்கள் 9990 ஆண்டுகள் தொடரந்து நடைபெற்றதாக எழுதியுள்ளார்.தமிழின் முதற்சங்கம் இன்று கடலுக்கு அடியில் புதையுண்டு இருக்கும்
தென் மதுரை நகரில் கி.மு 4440 இல் 4449 புலவர்கள் அடங்கலாக 39 மன்னரகளுடன் இணைந்து நடத்தப்பட்டது.இதில்தான் பரிபாடல், முதுநரை, முடுக்குருக்கு,பேரதிகாரம் ஆகியன இயற்றப்பட்டுள்ளன. ஆனால் அவை கடல் கோளினால் முற்றாக அழிந்து விட்டன.இரண்டாம் தமிழ் சங்கம் கி.மு3700இல் 3700 புலவர்களால் நடத்தப்பட்டது. இதில்தான் தொல்காப்பியம், பூதபுராணம்,மாபுராணம், ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.இதில் நமக்கு தொல்காப்பியம் மட்டுமே கிடைக்கப்பெற்றது. மூன்றாவது தமிழ்ச்சங்கம் கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது.அதில் அகநானூறு, புறநானூறு,நாலடியார்,திருக்குறள் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.



பிற்காலத்தில் சேர,சோழ,பாண்டிய்களால் நிலைநாட்டப்பட்ட கோயில் பல மருத்துவ வழி முறைகள்,சிற்பங்கள்,நீர்ப்பாசன முறைகள்,குள வடிவமைப்பு இன்னும் பல நுட்பங்களை உலகில் ஆதிக்கம் செலுத்தும் வல்லரசுகளின் அறிஞர்கள், விஞ்ஞானிகளால் கூட கையாள முடியாத நிலையில் உள்ளதோடு அவர்களும் இவற்றை கண்டு வியக்கிறனர். இதற்கு தமிழ் நாட்டு கோயில்களே சிறந்த உதாரணங்கள்.



பலராலும் புகழ்ந்து எழுதப்பட்ட மாயன்களின் வரலாறு அவர்களின் அற்புதங்கள் நிறைந்த புத்திக்கூர்மை என்பன தற்போது பேசப்படுகிறன.இதில் நாம் அறியா உண்மை என்னவெனில் அதுதான் மயன்களின் கடவுள் எனப்படுபவர் ஆரம்ப காலத்தில் அதாவது இன்றைக்கு 5200 வருடங்களுக்கு முன் ஆசியாவில் இருந்து வந்த ஒருவராவார்.அவரின் சொல்லுக்கே அங்கு மதிப்பு இருந்தாகவும் தமிழர்கள் இன்றும் வழிபடும் நாக வழிபாட்டையே அவர்களும் கடைப்பிடித்தார்கள். அதனையே இன்று வரை கடைப்பிடித்து வருகிறனர். அவர்கள் வழிபாட்டுக்கு உபயோகிக்கும் வாத்தியங்கள் கூட தமிழர்கள் பாவிக்கும் வாத்தியங்களாக உள்ளன. அவுஸ்ரேலியாவில் வாழும் பழங்குடிகளின் கடவுள் வழிபாட்டிலும்,கலாசார நிகழ்வுகளிலும் எமது சிவன் கடவுளின் முக்கண் கோலத்தைத்தான் தங்களின் வழிபாட்டிலம் உபயோகிக்கிறனர்.



இவ்வாறான கருத்துக்களை வைத்து பார்க்கும் போது உலகில் முதலில் தோன்றியது எமது தமிழர் பாரம்பரியம் என்று சொல்வதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.



வெளிக்கொண்டு வரப்படாத நம் வரலாற்றினை நாமே பரப்புவோம்.இனிமேல் 2000 வருடங்கள் பழமையானவர்கள்.5000 வருடஙகள் பழைமையானவர்கள் என்பதை விட்டு 20,000 வருடங்களுக்கும் முன் பழைரம வாய்ந்தது எம் தமிழ் மரபு என்று பெருமையுடன் உலகிற்கு சொல்வோம்.

Share and Enjoy:

0 கருத்துகள் for this post

Leave a reply

We will keep You Updated...
Sign up to receive breaking news
as well as receive other site updates!
Subscribe via RSS Feed subscribe to feeds
Sponsors
Template By SpicyTrickS.comSpicytricks.comspicytricks.com
Template By SpicyTrickS.comspicytricks.comSpicytricks.com
Popular Posts
Recent Stories
Connect with Facebook
Sponsors
Recent Comments
Tag Cloud