Featured Posts
Recent Articles

தண்டனை எல்லாம் வதையாகுமா... ?

நம்மினம் உயர நற் கருத்துக்களை தந்தவர்கள் நம் முன்னோர். தாம் மட்டுமன்றி தம் சமூகம் உயர்வதற்கும் ஊற்றுக் கண்களாக இருந்து பழமொழிகளையும் சிறந்த உவமைகளினையும் தந்தவர்கள் இவர்கள்.
இவ்வகையில் ”அடியாத மாடு படியாது” எனும் பழமொழி விளங்குகின்றது.
அதாவது, மாட்டிற்கு தொழில் பழக்கும் போது அதற்கு அடித்தால் தான் அது சரியாக புரிந்துகொண்டு செயற்படுகின்றது. அந்த வகையில் தவறு செய்யும் மாணவனை தண்டிக்காவிடின் மறுபடியும் அவன் அத்தவறினை செய்யவே முற்படுவான்.
ஆகவே, நாம் சிறந்த, பண்பாளர்களாக. நாட்டின் நாளைய விருட்சங்களாக மிளிர வேண்டும் என்ற நல் எண்ணத்தில் ஆசிரியர்கள் எம்மை தண்டிப்பதன்றி வேறெதுவுமில்லை.
இன்று மகான்களாகவும், கல்வியியளாளர்களாகவும் சமூகத்தில் மதிக்கத்தக்க இடத்தில் உள்ளவர்களும் தாம் கற்ற காலத்தில் ஆசான்களிடம் தண்டனை பெறாதவர்களா? வீட்டில் அம்மா அடித்தால் அழுதுவிட்டு அடங்கித்தானே போகின்றோம்? பள்ளியில் எம்மை வழிநடத்தும் ஆசிரியர்களும் அன்னை தந்தைக்கு நிகரானவர்கள் தானே? ஏன் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றோம்?
புதிய கல்விச் சீர்திருத்தம் தண்டனை வழங்குவது தவறு என சுட்டி நிற்கின்ற போதிலும் தவறு செய்கையில் எம்மை தண்டிக்க தவறின் எமது எதிர்காலம் என்னவாகும் என்பதை ஏன் சிந்திக்க தவறுகின்றீர்?
வெளிநாட்டுக் கல்விப் பாரம்பரியத்தினை எமது நாடு கைக்கொள்வதற்குரிய காலம் முழுமைப் படுத்தப்படவில்லை என்பதை யாவரும் உணர்வீர்களா? பாடசலைகளில் வளப்பங்கீடுகள் சமப்படுத்தப்படாத நிலையிலும், உள்ள வளங்களைக் கொண்டு மாணவர்களை ஆளுமை மிக்கவர்களாகவும், அறிவார்ந்தவர்களாகவும் ஆக்க பிரயத்தனம் மேற்கொள்ளும் நிலையிலேயே வடபகுதி பாடசாலைகள் இன்று உள்ளன என்பதை புரிந்து கொள்ள முடிகின்றதா?
யுத்தங்களின் மத்தியில் அனைத்தையும் இழந்து, கல்வியை மட்டுமே மூலதனமாக கொண்டு எழுந்து நிற்கத் துடிக்கும் எம் சமூகத்தின் எதிர்பார்ப்பு நல்ல மாணாக்கர்களை உருவாக்க வேண்டும் என்பதே!
இன்று கைத்தொலை பேசியோடும், கண்காணிக்கப்படாத இணையப் பாவனையோடும் சுற்றி வரும் மாணவர்களை வினைத்திறன் உள்ளவர்களாக்குவதற்கு, அவர்களை கண்டிக்கவும் தவறு செய்கையில் தண்டிக்கவும் வேண்டிய தார்மீகக் கடமை ஆசிரியர்களினதே என்பதை யாவரும் உணர வேண்டியவர்களே.
நாம் வாழ நல் வழி காட்டி நிற்கும் ஆசான்கள் எம் கண் கண்ட தெய்வங்கள். தவறு செய்யும் எம்மை தண்டிக்க வேண்டியவர்கள் அவர்களே. எமை நல்வழிப் படுத்த வேண்டியவர்களிற்கு தண்டனை வழங்குவதானது தெய்வத்தை நிந்திப்பதிலும் ஒரு படி மேலானது என்பதை எம்மவர்கள் புரிந்து கெண்டு செயற்பட வேண்டும்.

”ஆசான் வழங்கும் தண்டனை ஒரு வதையல்ல அது எம் வாழ்வின் வழிகாட்டி”
என்பதை புரிந்து செயற்படுவோம் !

Share and Enjoy:

0 கருத்துகள் for this post

Leave a reply

We will keep You Updated...
Sign up to receive breaking news
as well as receive other site updates!
Subscribe via RSS Feed subscribe to feeds
Sponsors
Template By SpicyTrickS.comSpicytricks.comspicytricks.com
Template By SpicyTrickS.comspicytricks.comSpicytricks.com
Popular Posts
Recent Stories
Connect with Facebook
Sponsors
Search
Archives
Blog Archives
Recent Comments
Tag Cloud