Featured Posts
Recent Articles

விடை காண முடியாத வினாக்களாக இவர்கள் ...!


லகின் ஒவ்வரு ஆதி இனமும், இன்று வாழும் தலைமுறைக்கு எதிர்காலம் பற்றி சிறு தடயத்தையாவது விட்டுத்தான் சென்று இருக்கிறது. அந்த தடயங்கள், எதிர்வுகூறல் என்பவற்றின் அடிப்டையில் தான் மாபெரும் தொழில்நுட்பங்கள் இன்றைய காலத்தில் கட்டியெழுப்பபட்டிருக்கிறது. அப்படி, முன்னைய காலத்தில் இன்று வாழும் தலைமுறைக்கு சவால் நிறைந்த நிறைய தடையங்களை விட்டு சென்றவர்களாக மாயன்களை சொல்லலாம். அவர்களது நாட்காட்டிஉலக அழிவு என அனைத்துமே முழு உலகையுமே நடுங்கச் செய்திருந்தது. 

இந்நிலையில் மாயன்கள் பற்றிய புதிய செய்தி மெக்சிகோவின் கிழக்குப் பகுதியிலிருந்து வந்திருக்கிறது. அங்குள்ள மழைக்காடுகளுக்குள் மாயன்களின் நகரொன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு மாயன்களின் வாழ்க்கை முறை தொடர்பிலும், மறைந்து வாழ்ந்த குறித்த மாயன் இனத்தொகுதியினர் பற்றியும் பழ உண்மைகளை வெளிபடுத்த கூடியன என்று நம்பப்படுகிறது.

பல நூறு வருடங்களாக அடர்ந்த காட்டுக்குள் மறைந்து கிடந்த மேற்படி நகரின் மூலம் மாயன் இனம் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் எவ்வாறு அழிந்து போனது தொடர்பில் தடயங்கள் கிடைக்குமென ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். விஞ்ஞானம் மற்றும் கலைக்கான ஸ்லோவேனிய கல்லூரியின் துணைப் பேராசிரியரான ஐவன் ஸ்பிரஜக் தலைமையிலான குழுவினரே குறித்த நகரைக் கண்டுபிடித்துள்ளனர்.



இந்த பகுதியில் மக்கள் வாழ்க்கைக்கான தகுநிலைகள் காணப்படாத நிலையில், இங்கு யாரும் வாழ்ந்திருக்க முடியாது என கருதி, ஆய்வுகள் எதுவுமே நடந்திருக்கவில்லை என்றும், ஆனால் தற்செயலாக இங்கு ஆய்வு நடாத்த முடிவு செய்த போதே, மிகப் பெரும் ஆச்சரியம் தரக்கூடிய இத்தகைய விடையங்களை கண்டுபிடிக்க கூடியதாக அமைந்திருந்ததாக கூறியிருக்கிறார்கள்.
குறித்த பகுதியில்15 பிரமிட்டுக்கள்  (75 அடி உயரமான பிரமிட் ஒன்று அடங்களாக) விளையாட்டுக்களில் ஈடுபடுவதற்கான  மைதானங்கள்உயரமான செதுக்கப்பட்ட கற்தூண்கள்போன்றவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

எனினும் குவாத்தமாலாவில் உள்ள டிகல் எனப்படும் மாயன் நகரை விட குறைந்த அளவில் அதாவது சுமார் 30,000 - 40,000 வரையானோரே இங்கு வசித்திருக்கலாம் எனவும் ஸ்பிரஜக் தெரிவித்துள்ளார். உலகின் பல பகுதிகளில் வசித்த பெருமைக்குரிய இனமாக மாயன்கள் இருக்கிறார்கள். ஆனால், ஆதி காலத்திலேயே இவர்கள் எப்படி இப்படி பரந்து விரிந்து வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதும் ஒரு ஆச்சரியம் தான்.



ஆனால் இதனை உறுதிப்படுத்திக்கொள்ள மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதனோடு இப்பகுதியில் பல மைதானங்கள் காணப்படுகின்றமையானது இப்பகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவிக்கின்றது.இப்பகுதியில்  600 மற்றும் 900 கி.பி. ஆண்டுக் காலப்பகுதியில் மாயன் நாகரீகம் வளம் பெற்று திகழ்ந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர் குழுவின் தலைவர் ஸ்பிரஜக் கூறுகின்றார்.

இந்நகரானது 54 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளதாகவும் இப்பகுதிக்கு 20 அல்லது30 வருடங்களுக்கு முன்னர் மனிதர்கள் வந்திருக்கலாம் எனவும் அதற்கான தடயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஸ்பிரஜக் சுட்டிகாட்டியுள்ளார்.இப்பகுதிக்கு வருவதற்கென 10 மைல் பாதையை 3 வாரமாக ஒழுங்குபடுத்த வேண்டியிருந்துள்ளது அதனோடு 6 வாரங்களாக இப்பகுதி தொடர்பான தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர்.

இப் பகுதியில் தொடர்ந்து ஆராய்ச்சி நடத்தினால் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த மாயன் இனத்தவர்களின் பிரிவுகளுக்கிடையிலான உறவினை தெரிந்துகொள்ளமுடியுமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மனித வரலாற்றில் மிகப்பெரும் ஆச்சரிய குறியாக இருக்கும் மாயன்களின் வாழ்க்கை முறை, இந்த இடத்திலாவது முடிவுக்கு வருகிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம். 

Share and Enjoy:

0 கருத்துகள் for this post

Leave a reply

We will keep You Updated...
Sign up to receive breaking news
as well as receive other site updates!
Subscribe via RSS Feed subscribe to feeds
Sponsors
Template By SpicyTrickS.comSpicytricks.comspicytricks.com
Template By SpicyTrickS.comspicytricks.comSpicytricks.com
Popular Posts
Recent Stories
Connect with Facebook
Sponsors
Search
Archives
Blog Archives
Recent Comments
Tag Cloud