Home » Archives for 2013
விரைவில் iphone புதிய மாதிரி வெளியிடப்படலாம் !

அப்பிள் நிறுவனம் அதனது ஐ ஃபோன் வரிசையின் புதிய படைப்பினை செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.இது குறித்த வெளிநாட்டு ஊடகங்கள் பலவாறான செய்திகளை தினமும் வெளியிட்டவாறு இருக்கிக்கின்றது. இருப்பினும் அப்பிள் நிறுவனமோ இதுவரையில் எதுவித கருத்துகளையும் வெளியிடவில்லை.
Power Of Tamils
*******************
அமெரிக்கர்கள்
*******************
பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500 அடி ஆழத்தில் மின்சார கேபிள்கள் கிடைத்தன. உடனே அவர்கள் அறிவித்தார்கள், “எங்களது முன்னோர்கள் மின்சாரத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தி உள்ளார்கள்.”
*******************
இரஷ்யர்கள்
*******************
அவர்கள் நாட்டில் பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500 அடி ஆழத்தில் டெலிபோன் கேபிள்கள் கிடைத்தன. அவர்கள் சொன்னார்கள், ...“எங்களது முன்னோர்கள் அந்தக்காலத்திலேயே டெலிபோனை பயன்படுத்தியுள்ளார்கள்”
*******************
தமிழர்களும்
*******************
தோண்டினார்கள். 1000 அடி தாண்டியும் ஒன்றும் கிடைக்கவில்லை. உடனே அறிவித்தார்கள்,
“எங்களது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வயர்லெஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள்” என்று...!
நாமறியாத நம் பெருமை - அடிமைகளின் சின்னமான தமிழனின் பெருமை மிகு வரலாறு!

தென்னிந்திய திரைப்படத்தில் தீபச்செல்வன் எழுதிய நம்பிக்கைப் பாடல் !

புதியவன் ராசய்யா ´யாவும் வசப்படும்´ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தின் டைட்டில் சோங்கை (எழுத்தோட்டப்பாடல்) தீபச்செல்வன் எழுதியுள்ளார். விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.
கதைக்கு ஏற்ப எழுதப்பட்ட இந்தப் பாடல் பல இடங்களில் ஈழத்தை நினைவுபடுத்துகிறது. தீபச்செல்வன் திரைப்படத்தில் எழுதிய முதல் பாடலையே அட்டகாசமாக எழுதியுள்ளார்.
திரைப்படத்தில் விஜித், தில்பிகா, பாலா, ரமேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். ஏஏஏ புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘யாவும் வசப்படும்’ திரைப்படத்திற்கு ஆர்.கே. சுந்தர் இசையமைத்துள்ளார்.
ஈழத்தின் கிளிநொச்சியை பிறப்பிடமாகக் கொண்ட தீபச்செல்வன் கவிதை, கட்டுரை, சிறுகதை என இதுவரை 11 நூல்களை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற இவர் தற்பொழுது சென்னைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கிறார்.
இலங்கை பத்திரிக்கை ஸ்தாபனம் 2010ம் ஆண்டின் சிறந்த ஊடகவியளாலர்களுக்கான விருது வழங்களில் தீபச்செல்வனுக்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சிறந்த கவிதைக்கான கணையாழி விருது இவருக்கு 2013 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
விடை காண முடியாத வினாக்களாக இவர்கள் ...!

உலகின் ஒவ்வரு ஆதி இனமும், இன்று வாழும் தலைமுறைக்கு எதிர்காலம் பற்றி சிறு தடயத்தையாவது விட்டுத்தான் சென்று இருக்கிறது. அந்த தடயங்கள், எதிர்வுகூறல் என்பவற்றின் அடிப்டையில் தான் மாபெரும் தொழில்நுட்பங்கள் இன்றைய காலத்தில் கட்டியெழுப்பபட்டிருக்கிறது. அப்படி, முன்னைய காலத்தில் இன்று வாழும் தலைமுறைக்கு சவால் நிறைந்த நிறைய தடையங்களை விட்டு சென்றவர்களாக மாயன்களை சொல்லலாம். அவர்களது நாட்காட்டி, உலக அழிவு என அனைத்துமே முழு உலகையுமே நடுங்கச் செய்திருந்தது.
இந்நிலையில் மாயன்கள் பற்றிய புதிய செய்தி மெக்சிகோவின் கிழக்குப் பகுதியிலிருந்து வந்திருக்கிறது. அங்குள்ள மழைக்காடுகளுக்குள் மாயன்களின் நகரொன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு மாயன்களின் வாழ்க்கை முறை தொடர்பிலும், மறைந்து வாழ்ந்த குறித்த மாயன் இனத்தொகுதியினர் பற்றியும் பழ உண்மைகளை வெளிபடுத்த கூடியன என்று நம்பப்படுகிறது.
பல நூறு வருடங்களாக அடர்ந்த காட்டுக்குள் மறைந்து கிடந்த மேற்படி நகரின் மூலம் மாயன் இனம் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் எவ்வாறு அழிந்து போனது தொடர்பில் தடயங்கள் கிடைக்குமென ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். விஞ்ஞானம் மற்றும் கலைக்கான ஸ்லோவேனிய கல்லூரியின் துணைப் பேராசிரியரான ஐவன் ஸ்பிரஜக் தலைமையிலான குழுவினரே குறித்த நகரைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த பகுதியில் மக்கள் வாழ்க்கைக்கான தகுநிலைகள் காணப்படாத நிலையில், இங்கு யாரும் வாழ்ந்திருக்க முடியாது என கருதி, ஆய்வுகள் எதுவுமே நடந்திருக்கவில்லை என்றும், ஆனால் தற்செயலாக இங்கு ஆய்வு நடாத்த முடிவு செய்த போதே, மிகப் பெரும் ஆச்சரியம் தரக்கூடிய இத்தகைய விடையங்களை கண்டுபிடிக்க கூடியதாக அமைந்திருந்ததாக கூறியிருக்கிறார்கள்.
குறித்த பகுதியில்15 பிரமிட்டுக்கள் (75 அடி உயரமான பிரமிட் ஒன்று அடங்களாக) , விளையாட்டுக்களில் ஈடுபடுவதற்கான மைதானங்கள், உயரமான செதுக்கப்பட்ட கற்தூண்கள், போன்றவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
எனினும் குவாத்தமாலாவில் உள்ள டிகல் எனப்படும் மாயன் நகரை விட குறைந்த அளவில் அதாவது சுமார் 30,000 - 40,000 வரையானோரே இங்கு வசித்திருக்கலாம் எனவும் ஸ்பிரஜக் தெரிவித்துள்ளார். உலகின் பல பகுதிகளில் வசித்த பெருமைக்குரிய இனமாக மாயன்கள் இருக்கிறார்கள். ஆனால், ஆதி காலத்திலேயே இவர்கள் எப்படி இப்படி பரந்து விரிந்து வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதும் ஒரு ஆச்சரியம் தான்.

ஆனால் இதனை உறுதிப்படுத்திக்கொள்ள மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதனோடு இப்பகுதியில் பல மைதானங்கள் காணப்படுகின்றமையானது இப்பகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவிக்கின்றது.இப்பகுதியில் 600 மற்றும் 900 கி.பி. ஆண்டுக் காலப்பகுதியில் மாயன் நாகரீகம் வளம் பெற்று திகழ்ந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர் குழுவின் தலைவர் ஸ்பிரஜக் கூறுகின்றார்.
இந்நகரானது 54 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளதாகவும் இப்பகுதிக்கு 20 அல்லது30 வருடங்களுக்கு முன்னர் மனிதர்கள் வந்திருக்கலாம் எனவும் அதற்கான தடயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஸ்பிரஜக் சுட்டிகாட்டியுள்ளார்.இப்பகுதிக்கு வருவதற்கென 10 மைல் பாதையை 3 வாரமாக ஒழுங்குபடுத்த வேண்டியிருந்துள்ளது அதனோடு 6 வாரங்களாக இப்பகுதி தொடர்பான தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர்.
இப் பகுதியில் தொடர்ந்து ஆராய்ச்சி நடத்தினால் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த மாயன் இனத்தவர்களின் பிரிவுகளுக்கிடையிலான உறவினை தெரிந்துகொள்ளமுடியுமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மனித வரலாற்றில் மிகப்பெரும் ஆச்சரிய குறியாக இருக்கும் மாயன்களின் வாழ்க்கை முறை, இந்த இடத்திலாவது முடிவுக்கு வருகிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்...!

முதல் விருப்பமாக,
"என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."
இரண்டாவது,
'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."
மூன்றாவதாக,
"என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."
வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன.என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து,"அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம்.
ஆனால்,
இதற்கான காரணத்தை தாங்கள் எங்களுக்கு விளக்க வேண்டும்" என்று கேட்க, அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.
1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள். மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது.மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.மரணம் ஒரு நிதர்சனமான உண்மை .
2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை யாரும் தன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அது சவக்குழி வரை மட்டும்தான்..! மனிதர்கள் வீணாக சொத்துக்கள்,செல்வங்கள் போன்றவற்றின் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!
3. உலகையே வென்றவன் இந்த மாவீரன் அலெக்ஸாண்டர், சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக..
ஆம்.நண்பர்களே,
நாமும் அப்படித்தான் நம்ம வாழ்க்கையை தற்போது வாழ்ந்து வருகின்றோம்.நம் வாழ்க்கையே எப்போதும் பணம்,பணம்,பணம்தான்.சதா நாம் அனைவரும் அதன் பின்னால் ஓடிக் கொண்டே இருக்கின்றோம்.எனக்கு நேற்று இந்த அலெக்சாண்டரின் கதையை படித்துக் கொண்டு இருந்த போது எனது மனதில் இதுதான் நிழலாடியது.
நம் கவியரசு.கண்ணதாசன் அவர்களின் ஒருதிரைப்பாடல்.
அதை மறைந்த டி.எம்.எஸ்.அவர்கள் உயிரோட்டமாக பாடிஇருப்பார்.
"வீடு வரை உறவு,
வீதி வரை மனைவி,
காடு வரை பிள்ளை,
கடைசி வரை யாரோ, என்று..
என்ன அருமை நண்பர்களே,உண்மைதானே...???
லண்டனில் தமிழ்ப் பெண்ணை எட்டி உதைத்த சிங்களவரின் பேஸ்புக் கணக்கு முடக்கம் !

லண்டனில் இலங்கை கிரிக்கெட் அணியை புறக்கணிக்குமாறு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தமிழ்ப் பெண்ணொருவரை எட்டி உதைத்த சிங்கள இளைஞரின் முகநூல் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
நிபுல் தெவரப்பெரும என்ற இந்த இளைஞர் லண்டன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் பெண்ணொருவரை எட்டி உதைத்திருந்தார்.
பின்னர் அது குறித்து அவர் தனது சிங்களவர்களிடமிருந்து பேஸ்புக் தளத்தில் தகவல் வெளியிட்டதையடுத்து, அவருக்கு முகநூல் வலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவியத் தொடங்கியது.
மேலும் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வாழும் சிங்களவர்கள் மத்தியில் அவர் ஒரு ஹீரோ அந்தஸ்தில் மதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரது இனவாத செயற்பாடு மற்றும் அதுபற்றியமுகநூல் தகவல்கள் குறித்து புலம் பெயர் தமிழ் இளையோர்கள் முகநூல் நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து, நிபுல் தெவரப்பெருமவின் பேஸ்புக் கணக்கை பேஸ்புக் நிர்வாகம் உடனடியாக நிரந்தரமாக மூடிவிட்டது.
இச்சம்பவம் லண்டன் ஆர்ப்பாட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்ட சிங்களவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.

தொலைவில் இருக்கும் கணணியை நமது கணினி மூலம் இயக்குவது எப்படி ?

72 மணி நேரத்தில் 1 லட்சம் பொதுமக்களை உத்தர்காண்டில் காப்பாற்றியுள்ளனர்...!
காப்பாற்றியவர்கள் நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள் இல்லை, ஆயிரம் பேர் வந்தாலும் ஒரே ஆளா நிண்ணு சமாளிக்கிற சினிமா ஹீரோக்கள் இல்லை, கோடி கோடிய பணம் சம்பாதிக்கிற நாம் தலையில் தூக்கி வைத்து ஆடும் கிரிக்கெட் வீரர்கள் இல்லை...
.
.
.
.
தன் நாட்டுக்காக தன் உயிரையும் பொருட்படுத்தாமல் வேலை செய்யும் இந்திய ராணுவ வீரர்கள்...
வாழ்க அவர் தம் சேவை...!
இந்த கடையினை யாருக்காவது நியாபகம் இருக்கின்றதா ...?

இந்த பாண்டியன் சுவையூற்றில் உணவு வகைகளின் விலை மற்ற தனியார் உணவகன்களோடு ஒப்பிடுகையில் மிக மிக மலிவாக இருந்து வந்தது என்பது குறிப்பிடத் தக்கது. இப்போது தமிழகத்தில் ஜெயலலிதா ஆரம்பித்து வைத்து இருக்கும் மலிவு விலை உணவகங்களை புலிகள் அந்த காலத்திலேயே மக்களின் தேவையை அறிந்து ஈழத்தின் பல பகுதிகளில் ஆரம்பித்து மக்களுக்கு மிகப்பெரும் உதவிகளை செய்து வநதனர்.
இங்கு உள்ள அரசு போல் ஒரு இலட்சம் ரூபாய்க்கு மக்களுக்கு நல திட்ட உதவிகளை செய்துவிட்டு, அதை வைத்து சுய விளம்பரம் செய்ய இரண்டு இலட்சம் செலவு செய்வது அல்ல புலிகளின் அரசு. முழுக்க முழுக்க மக்களின் தேவைகளை மடுமே நோக்காக கொண்டு ஆரம்பித்து அவற்றை முழுக்க முழுக்க மக்களுக்காகவே நடைமுறைப்படுத்துவது தான் புலிகளின் அரசு. அதற்கு சிறு எடுத்துக்காட்டு தான் இந்த பாண்டியன் சுவையூற்று.
பாண்டியன் சுவையூற்றைப்போன்று சேரன் சுவையகம், இளந்தென்றல் ஓய்வகம், காமதேனு, கிளியரசன் சுவையகம் போன்று புலிகளினால் நடத்தபட்ட பல உணவகங்கள அந்த காலத்தில் பொது மக்களின் தேவைகளுக்காக ஆரம்பிக்கபட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வந்தன
இப்போது இந்த பாண்டியன் சுவையூற்றையும் சந்திரன் பூங்காவையும் சிங்கள நாய்கள் இடித்து தரைமட்டமாக்கி விட்டனர்.
இந்த பாண்டியன் சுவையுற்று என்பது புலிகளின் ஆட்சி காலத்தில் ஈழத்தில் வசித்து வந்த மக்களுக்கு மறக்க முடியாத பல சந்தோசமான அனுபவங்களை வழங்கி இருந்தது. அதிலும் கிளிநொச்சியை சூழ இருந்த மக்களின் மனங்களில் இந்த பாண்டியன் சுவையூற்று என்பது அழிக்க முடியாத ஒரு நினைவாக என்றும் இருக்கும். கிளிநொச்சி பேருந்து நிலையத்துக்கு அருகில் இருந்த இந்த பாண்டியன் சுவையூற்றும் அதற்கு முன்னாள் இருந்த சந்திரன் பூங்கா பற்றி நினைத்துப் பாத்தாலே கண்களில் கண்ணீர் வருகின்றன.
எதேச்சையாக இந்த படத்தினை இணையத்தில் பார்த்த போது பழைய நினைவுகளை கிளறிவிட்டன. மறக்கக் கூடிய நாட்களா அவை....?எவ்வளவு அழகிய நாட்கள் அவை. எமது மண்ணில்... எமது புலிகளின் ஆட்சியில்.... எமது போராளிகளின் பாதுகாப்பில்... எமது தலைவரின் கீழ் ....எமது தமிழினம் மகிழ்ச்சியாக வாழ்ந்த அந்த நாட்கள் இனி திரும்பி எப்போது வரும் என்று தெரியவில்லை.
அனால் கண்டிப்பாக திரும்பி வரும். தலைவரின் ஆட்சியின் கீழ் போராளிகளின் பாதுகாப்பின் கீழ் தமிழினம் மீண்டும் தலை நிமிரும்.
.... அது மட்டும் நிச்சயம் ...!

ஈழம்பெண்கள்
எல்.இ.டி விளக்குகளால் கண் பார்வை பறிபோகும் !

விலை குறைவான குண்டு பல்புகளைத்தான் மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். ஆனால், இவை வெப்பத்தை அதிகளவில் உமிழ்வதாகவும், மின்சாரத்தை அதிகளவில் உறிஞ்சுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக எல்இடி எனப்படும், ‘லைட் எமிட்டிங் டையோடு’ விளக்குகள் அறிமுகம் ஆனது. இவை குண்டு பல்புகள் பயன்படுத்தும் மின்சாரத்தில் 5ல் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்துவதாகவும், சுற்றுச்சூழலுக்கு மிக சிறப்பானது என்றும் கூறப்பட்டது. இதனால், ஐரோப்பிய யூனியனில் பல ஆண்டுகளுக்கு முன்பே குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது.
இந்தியாவில் 2009ம் ஆண்டில் 100 வாட்ஸ் குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், செல்போன்கள், டிவி என்று பல்வேறு மின்னணு சாதனங்களில் எல்இடி பயன்பாடு அதிகரித்துவிட்டது. தற்போது மக்களிடம் எல்இடி பல்புகளை பற்றி, மின்சாதன நிறுவனங்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன. சென்னையில் குடிசைகளுக்கு இந்த வகை பல்புகளை இலவசமாக வழங்குவது குறித்து மாநகராட்சியும் ஆலோசித்து வருகிறது. ஆனால், எல்இடி பல்புகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் தற்போது பகீர் தகவல் வெளியிட்டுள்ளார். மேட்ரிட்டில் உள்ள கம்ப்லூடென்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் செலியா சான்செஜ் ரமோஸ் என்பவர் தலைமையில் ஒரு குழு, எல்இடி பல்புகள் குறித்து ஆராய்ச்சி நடத்தி முடிவை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து, ரமோஸ் கூறியிருப்பதாவது: எல்இடி பல்புகள் சுற்றுச்சூழலுக்கு சிறப்பானது என்றாலும், அதில் இருந்து நீல மற்றும் செங்கரு நீல (வயலட்) கதிர்கள் வெளியாகின்றன. இவை சிறிய அலைவீச்சை கொண்ட சக்திவாய் ந்த கதிர்கள். இவை அதிக சக்திவாய்ந்தவை என்றாலும், குளுமையாக இருப்பதால் சாதாரணமாக அதை பார்த்து கொண்டிருக்க முடியும். இதுபோன்று எல்இடி விளக்குகளின் வெளிச்சத்தை பார்க்கும்போது, அது கண்ணின் விழித்திரையை பாதிக்கும். கண்கள், வெளிச்சத்தின் துணையுடன் பார்க்கக்கூடிய தன்மை கொண்டது. மாறாக வெளிச்சத்தை மட்டும் பார்க்கக்கூடியது அல்ல. எல்இடி விளக்குகள் உமிழும் வெளிச்சம் குளுமையாக இருப்பது போல் தோன்றினாலும், அதனால் கண் பார்வைக்கு ஆபத்து அதிகம். இவ்வாறு கூறியுள்ளார்.
விரைவில் வருது சோலார் பெயின்ட் !

உலகம் முழுவதும் சோலார் மின் உற்பத்தி திட்டங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அனல், நீர்மின் திட்டங்களில் மின்உற்பத்தி குறையும் பகுதிகளில் சோலார் மின் உற்பத்தியில் அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன. மக்களும் அரசுகளும் இதில் சற்று தயக்கம் காட்டுவதற்கு காரணம்.. சோலார் பேனல்கள் அமைப்பதற்கு ஆகும் அதிகப்படியான செலவு.
வருங்காலத்தில் சோலார் பேனலுக்கு அதிகம் செலவிட அவசியம் இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதுபற்றி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள பஃபல்லோ பல்கலைக்கழக எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான கியாவ்கியாங் கான் கூறியதாவது: ஒளி ஆற்றலை மின்சாரமாக மாற்றும் திறன் பெற்ற சோலார் செல்களின் தொகுப்புதான் சோலார் பேனல் எனப்படுகிறது.
பொதுவாக பாலி கிரிஸ்டலைன் சிலிகானை கொண்டுதான் இந்த பேனல் உருவாக்கப்படுகிறது. மெலிதான பிலிம் போல பேனலை தயாரிப்பதென்றால் அமார்பஸ் சிலிகான் அல்லது காட்மியம் டெல்யூரைடு பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு வகையுமே அதிக செலவு ஏற்படுத்தக் கூடியவை. குறைந்த செலவிலான சோலார் பேனல்களை உருவாக்கும் முயற்சி உலகம் முழுக்க நடக்கிறது. அந்த வகையில் பிளாஸ்மோனிக் தன்மை கொண்ட ஆர்கானிக் வகை பொருட்களை சோலார் பேனலாக பயன்படுத்தினால் அதிக மின்உற்பத்தி செய்ய முடியும். செலவும் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இது திரவ வடிவில் இருப்பதால் பயன்படுத்துவதும் எளிது. திரவ வடிவில் இருக்கும் சோலார் பேனலை சுவர், தரை என எந்த பகுதியிலும் பெயின்ட் போல எளிதில் பூச முடியும். வெளிச்சம் கிடைக்கும் எல்லா இடத்திலும் இந்த பெயின்ட் அடித்தால் மின்உற்பத்தியும் அதிகளவில் நடக்கும். இது மட்டுமின்றி கார்பனை அடிப்படையாக கொண்ட சிறு மூலக்கூறுகள், பாலிமர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி பிலிம் வகை சோலார் பேனல் உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம். இவற்றையும் குறைந்த செலவில் தயாரிக்க முடியும். இவ்வாறு கியாவ்கியாங் கான் கூறினார்.
பேஸ்புக்கை தாக்கும் புதிய வைரஸ் : எச்சரிக்கும் மைக்ரோசொப்ட் !

Firefox, Chrome போன்ற இணைய உலாவிகளின் Plug-ins என்ற போர்வையிலேயே இந்த வைரஸ் பரவுவதாகவும் குறித்த வைரஸ் தாக்கிய கணனியின் மூலம் அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளுவதாகவும் தெரிவித்துள்ள மைக்ரோசொப்ட் நிறுவனம் அதிலிருந்து ஓரளவு தப்பிக்கவும் சில வழிகளைக் கூறியுள்ளது.
அதாவது தரவேற்றம் செய்யக் கூறி புதிதாக Firefox, Chrome ஊடாக வரும் Plug-ins களை தவிர்த்தல் மேலும் பேஸ்புக்கினைப் பயன்படுத்திவிட்டு முறைப்படி அதிலிருந்து வெளியேறுவதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது. இதேவேளை இந்த வைரஸ் விரைவில் பிரேஸில் தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கும் பல மொழிகளில் பரவலடையும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக கூறப்படுகின்றது.
தண்டனை எல்லாம் வதையாகுமா... ?
நம்மினம்
உயர நற் கருத்துக்களை தந்தவர்கள் நம் முன்னோர். தாம் மட்டுமன்றி தம் சமூகம் உயர்வதற்கும்
ஊற்றுக் கண்களாக இருந்து பழமொழிகளையும் சிறந்த உவமைகளினையும் தந்தவர்கள் இவர்கள்.
இவ்வகையில்
”அடியாத மாடு படியாது” எனும் பழமொழி விளங்குகின்றது.
அதாவது,
மாட்டிற்கு தொழில் பழக்கும் போது அதற்கு அடித்தால் தான் அது சரியாக புரிந்துகொண்டு
செயற்படுகின்றது. அந்த வகையில் தவறு செய்யும் மாணவனை தண்டிக்காவிடின் மறுபடியும் அவன்
அத்தவறினை செய்யவே முற்படுவான்.
ஆகவே,
நாம் சிறந்த, பண்பாளர்களாக. நாட்டின் நாளைய விருட்சங்களாக மிளிர வேண்டும் என்ற நல்
எண்ணத்தில் ஆசிரியர்கள் எம்மை தண்டிப்பதன்றி வேறெதுவுமில்லை.
இன்று
மகான்களாகவும், கல்வியியளாளர்களாகவும் சமூகத்தில் மதிக்கத்தக்க இடத்தில் உள்ளவர்களும்
தாம் கற்ற காலத்தில் ஆசான்களிடம் தண்டனை பெறாதவர்களா? வீட்டில் அம்மா அடித்தால் அழுதுவிட்டு
அடங்கித்தானே போகின்றோம்? பள்ளியில் எம்மை வழிநடத்தும் ஆசிரியர்களும் அன்னை தந்தைக்கு
நிகரானவர்கள் தானே? ஏன் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றோம்?
புதிய
கல்விச் சீர்திருத்தம் தண்டனை வழங்குவது தவறு என சுட்டி நிற்கின்ற போதிலும் தவறு செய்கையில்
எம்மை தண்டிக்க தவறின் எமது எதிர்காலம் என்னவாகும் என்பதை ஏன் சிந்திக்க தவறுகின்றீர்?
வெளிநாட்டுக்
கல்விப் பாரம்பரியத்தினை எமது நாடு கைக்கொள்வதற்குரிய காலம் முழுமைப் படுத்தப்படவில்லை
என்பதை யாவரும் உணர்வீர்களா? பாடசலைகளில் வளப்பங்கீடுகள் சமப்படுத்தப்படாத நிலையிலும்,
உள்ள வளங்களைக் கொண்டு மாணவர்களை ஆளுமை மிக்கவர்களாகவும், அறிவார்ந்தவர்களாகவும் ஆக்க
பிரயத்தனம் மேற்கொள்ளும் நிலையிலேயே வடபகுதி பாடசாலைகள் இன்று உள்ளன என்பதை புரிந்து
கொள்ள முடிகின்றதா?
யுத்தங்களின்
மத்தியில் அனைத்தையும் இழந்து, கல்வியை மட்டுமே மூலதனமாக கொண்டு எழுந்து நிற்கத் துடிக்கும்
எம் சமூகத்தின் எதிர்பார்ப்பு நல்ல மாணாக்கர்களை உருவாக்க வேண்டும் என்பதே!
இன்று
கைத்தொலை பேசியோடும், கண்காணிக்கப்படாத இணையப் பாவனையோடும் சுற்றி வரும் மாணவர்களை
வினைத்திறன் உள்ளவர்களாக்குவதற்கு, அவர்களை கண்டிக்கவும் தவறு செய்கையில் தண்டிக்கவும்
வேண்டிய தார்மீகக் கடமை ஆசிரியர்களினதே என்பதை யாவரும் உணர வேண்டியவர்களே.
நாம்
வாழ நல் வழி காட்டி நிற்கும் ஆசான்கள் எம் கண் கண்ட தெய்வங்கள். தவறு செய்யும் எம்மை
தண்டிக்க வேண்டியவர்கள் அவர்களே. எமை நல்வழிப் படுத்த வேண்டியவர்களிற்கு தண்டனை வழங்குவதானது
தெய்வத்தை நிந்திப்பதிலும் ஒரு படி மேலானது என்பதை எம்மவர்கள் புரிந்து கெண்டு செயற்பட
வேண்டும்.
”ஆசான்
வழங்கும் தண்டனை ஒரு வதையல்ல அது எம் வாழ்வின் வழிகாட்டி”
என்பதை புரிந்து செயற்படுவோம்
!
அன்ராய்ட் அன்ராய்ட் சந்தைக்கான 5 மாற்று சந்தைகள் !
அன்ராய்டு சந்தை - கூகிலின் அங்கீகரிக்கப்பட்ட அன்ராய்டு போன்களுக்கான சந்தை. இங்கே இலவசமாகவும் பணம் செலுத்தியும் மென்பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்த மார்கெட்டில் APK FILE களை DOWNLOAD செய்வது சற்று கடினமான விடயம். போனிலும் இணைய இணைப்பு பெற்று இருக்க வேண்டும். APK FILE களை நேரடியாக கணிணியில் DOWNLOAD செய்ய முடியாது.நேரடியாக APK FILE களை கணிணியில் பதிவிறக்கம் செய்ய ANDROID MARKET க்கு மாற்றாக சில சந்தைகளை பட்டியல் இடுகிறேன்.
1. android Freeware Lovers
இந்த தளம் அன்ராய்டுக்கான அப்ளிகேசன்களை நேரடியாக கணிணிக்கு பதிவிறக்கம் செய்ய பயன்படுகிறது. இந்த தளத்தில் அன்ராய்டு அப்ளிகேசன்கள் அழகான முறையில் பட்டியல் இடப்பட்டு இருக்கிறது. Android Developerகளும் அவர்களுடைய அப்ளிகேசன்களை இங்கே பதிவேற்றம்செய்யலாம்.
2. Get Jat
கெட் ஜார் அனைவராலும் அறியப்பட்ட ஜாவா, சிம்பியன் அப்ளிகேசன்களுக்கான வலைதளம் ஆகும். இந்த தளம் தற்போது அன்ராய்டு அப்ளிகேசன்களையும் வழங்குகிறது. இந்த தளத்தில் தளத்தில் அப்ளிகேசன்கள் வரிசையாக பட்டியல் இடப்பட்டும், விசிட்டர்களின் அன்ராய்டு போன்களுக்கு டாப் அப்ளிகேசன்கள் வழங்கப்படுகின்றன. அன்ராய்டு சிம்பியன் பிளாக் பெர்ரி மற்றும் ஜாவா போன்களுக்கு தலைசிறந்த அப்ளிகேசன்கள் வழங்கப்படுகின்றன.
3. Amazon App Store
ஒரு புதிய அன்ராய்ட்டிற்கு மாற்றான சந்தையை அமேசன் நிறுவனம் தருகிறது. அமேசன் சந்தையில் ் தினமும் ஒரு அப்ளிகேசன் இலவசமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அமேசான் நிறுவனம் US வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தற்போது அன்ராய்டு அப்ளிகேசன்களை வழங்குகிறது.
4. App Brain
மற்றும் ஒரு எளிமையான சிறப்பான இலவசமான அப்ளிகேசன்களை வழங்கும் இணையதளம் ஆகும். சிறப்பான முறையில் பட்டியல் இடப்பட்ட அப்ளிகேசன்கள் இதனுடைய சிறப்பு ஆகும். நேரடியாக அன்ராய்டு APK FILE களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
5. Only Android
ஒரு சிறந்த அன்ராய்டுக்கான சந்தை ஆகும். இதுவும் ஒரு சிறப்பான அப்ளிகேசன்களை உள்ளடக்கிய தளம் ஆகும். இந்த தளத்தில் பெரும்பாலான அப்ளிகேசன்களுக்கு பணம் செலுத்த வேண்டி உள்ளது. பணம் செலுத்தி அப்ளிகேசன்கள் வாங்க வேண்டுமானால் அன்ராய்டு சந்தைக்கு மாற்றாக இதை பயன்படுத்தி கொள்ளலாம்.
Popular Posts
-
தரங்கம்பாடி: காரைக் கால் மாவட்டம் கீழ காசாகுடியை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவி ஹர்சதா நவீன தெருவிளக்கு ஒன்றை வடிவமைத்துள்ளார்.
-
காய்ச்சல் போன்ற நோய் ஏற்படும் தருணங்களில் வெப்பநிலையை அளவிடுவதற்கு பயன்படுத்தப்படும் வெப்பமானிகளை தற்போது ஸ்மார்ட் போன்களில் இணைத்து பயன்...
-
காப்பாற்றியவர்கள் நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள் இல்லை, ஆயிரம் பேர் வந்தாலும் ஒரே ஆளா நிண்ணு சமாளிக்கிற சினிமா ஹீரோக்...
-
மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட கிளவுட் ஸ்டோரேஜ் (cloud storage) எனப்படும் ஆன்லைன் சேமிப்பு வசதியானது மில்லியன் பயனர்க...
-
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கைபேசி திரையை தொட்டு பயன்படுத்துவோம். அழுத்தும் வேகம், மேலே கீழே தடவுவது என இந்த செயல்கள் ஒவ்வொரு ஆளுக்கும் ...
-
அப்பிள் நிறுவனம் அதனது ஐ ஃபோன் வரிசையின் புதிய படைப்பினை செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியா...
-
சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி இன்றைய காலகட்டத்தில் அபாரமானதாக இருக்கிறது. Facebook, Tweeter, Google+ போன்ற சமூக வலைத்தளங்களில் பலரும் மணிக்...
-
அன்ராய்டு சந்தை - கூகிலின் அங்கீகரிக்கப்பட்ட அன்ராய்டு போன்களுக்கான சந்தை. இங்கே இலவசமாகவும் பணம் செலுத்தியும் மென்பொருட்களை ப...
-
தொன்மையான மொழிகளில் ஒன்றான நமது தமிழ்மொழி தற்போது கையடக்க கணினிகளிலும், செல்பேசிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
-
ஒரு விநாடியிலேயே முழு திரைப்படத்தையும் டவுன்லோடு செய்யும் அளவுக்கு அதிவேகம் கொண்ட, ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றை சோதனையை சாம்சங் நிறுவ...
Recent Posts
Get in Touch
Custom content
Recent Stories
Connect with Facebook
Sponsors
Search
Archives
-
▼
2013
(26)
- ► செப்டம்பர் (6)
-
►
ஜூன்
(18)
- தென்னிந்திய திரைப்படத்தில் தீபச்செல்வன் எழுதிய நம்...
- விடை காண முடியாத வினாக்களாக இவர்கள் ...!
- மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்...!
- லண்டனில் தமிழ்ப் பெண்ணை எட்டி உதைத்த சிங்களவரின் ப...
- தொலைவில் இருக்கும் கணணியை நமது கணினி மூலம் இயக்குவ...
- 72 மணி நேரத்தில் 1 லட்சம் பொதுமக்களை உத்தர்காண்டில...
- இந்த கடையினை யாருக்காவது நியாபகம் இருக்கின்றதா ...?
- நவீன தானியங்கி தெருவிளக்கு : 6ம் வகுப்பு மாணவி வடி...
- எல்.இ.டி விளக்குகளால் கண் பார்வை பறிபோகும் !
- விரைவில் வருது சோலார் பெயின்ட் !
- நவீன தொழில்நுட்ப உதவியுடன் வீட்டை நகர்த்தி வைத்து ...
- மாணவர்களுக்காக Sky Drive தரும் மேலதிக சேமிப்பு வசதி !
- முழு திரைப்படத்தையும் 1-விநாடியில் தரவிறக்கம் செய்...
- பேஸ்புக்கை தாக்கும் புதிய வைரஸ் : எச்சரிக்கும் மைக...
- தண்டனை எல்லாம் வதையாகுமா... ?
- அன்ராய்ட் அன்ராய்ட் சந்தைக்கான 5 மாற்று சந்தைகள் !
- இணையத்தள திருட்டில் இருந்து உங்கள் தளத்தை பாதுகாப்...
- கையால் இயக்கும் காரை வடிவமைத்த தமிழக மாற்றுத் திறன...
Categories
லேபிள்கள்
- அறிவியல் (2)
- சந்தை (1)
- தன்னம்பிக்கை (2)
- தெய்வங்கள் (2)
- தொலைபேசி (1)
- தொழில்நுட்பம் (9)
- நகைச்சுவை (1)
- பாதுகாப்பு (2)
- முள்ளு (1)
- மென்பொருள் (1)
- வரலாறு (5)
Blog Archives
-
▼
2013
(26)
- ► செப்டம்பர் (6)
-
►
ஜூன்
(18)
- தென்னிந்திய திரைப்படத்தில் தீபச்செல்வன் எழுதிய நம்...
- விடை காண முடியாத வினாக்களாக இவர்கள் ...!
- மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்...!
- லண்டனில் தமிழ்ப் பெண்ணை எட்டி உதைத்த சிங்களவரின் ப...
- தொலைவில் இருக்கும் கணணியை நமது கணினி மூலம் இயக்குவ...
- 72 மணி நேரத்தில் 1 லட்சம் பொதுமக்களை உத்தர்காண்டில...
- இந்த கடையினை யாருக்காவது நியாபகம் இருக்கின்றதா ...?
- நவீன தானியங்கி தெருவிளக்கு : 6ம் வகுப்பு மாணவி வடி...
- எல்.இ.டி விளக்குகளால் கண் பார்வை பறிபோகும் !
- விரைவில் வருது சோலார் பெயின்ட் !
- நவீன தொழில்நுட்ப உதவியுடன் வீட்டை நகர்த்தி வைத்து ...
- மாணவர்களுக்காக Sky Drive தரும் மேலதிக சேமிப்பு வசதி !
- முழு திரைப்படத்தையும் 1-விநாடியில் தரவிறக்கம் செய்...
- பேஸ்புக்கை தாக்கும் புதிய வைரஸ் : எச்சரிக்கும் மைக...
- தண்டனை எல்லாம் வதையாகுமா... ?
- அன்ராய்ட் அன்ராய்ட் சந்தைக்கான 5 மாற்று சந்தைகள் !
- இணையத்தள திருட்டில் இருந்து உங்கள் தளத்தை பாதுகாப்...
- கையால் இயக்கும் காரை வடிவமைத்த தமிழக மாற்றுத் திறன...
Recent Comments
Tag Cloud
Categories
- அறிவியல் (2)
- சந்தை (1)
- தன்னம்பிக்கை (2)
- தெய்வங்கள் (2)
- தொலைபேசி (1)
- தொழில்நுட்பம் (9)
- நகைச்சுவை (1)
- பாதுகாப்பு (2)
- முள்ளு (1)
- மென்பொருள் (1)
- வரலாறு (5)
தீ-தமிழ். Blogger இயக்குவது.